முக்கிய செய்திகள்:
ஆம் ஆத்மியில் பதர் சயீத் இணைந்தார்

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீத் இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.இந்தத் தகவலை, ஆம் ஆத்மி கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் எம்.லெனின் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் பதர் சயீத் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்றும் லெனின் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞரான பதர் சயீத், 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை சென்னை - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகள்