முக்கிய செய்திகள்:
திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுரை

இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை பதிவதை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான உண்மைத் தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்று திமுகவினருக்கு பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி, ஏற்கெனவே பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைதளத்தில் கணக்கு தொடங்கி, பல்வேறு பதிவுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் இணைந்துள்ளார்.

கருணாநிதியின் பேஸ்புக் தளத்தை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 900 பேர் ‘லைக்’ செய்துள்ளனர். அவரது, ட்விட்டர் பக்கத்தில் 20,301 பேர் ஃபாலோயர்களாக பதிவு செய்திருந்தனர். ஸ்டாலினின் பேஸ்புக்கில் 52,503 பேர் ‘லைக்’ செய்துள்ளனர்.

கணக்கு துவங்கிய ஒரே நாளில் ஸ்டாலினின் ட்விட்டரில் 4,200 பேர் ஃபாலோயர்களாக பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இணையதள பிரச்சாரம் குறித்து ஞாயிற்றுக்கிழமை ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

இணையதளங்களில் திமுக வினர் பொது நிகழ்ச்சிகள், பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்துவதில் ஆர்வம் காட்டு வதும், அதற்காகவே நேரத்தை செலவழிப்பதும் கட்சிக்குப் பயன் தராது. அது இணையதள செயல்பாடும் ஆகாது. பேஸ் புக், வலைப்பூ, ட்விட்டர் உள்ளிட்ட அனைத்திலும் இணைய தோழர்கள் கவனம் செலுத்தவேண்டும்.

கட்சிக்கு ஆதரவாக செயல் படுவதுபோல சிலர் கலகமூட்டும் பணியில் ஈடுபடுவதையும் நான் கவனிக்கிறேன். கட்சியின ருக்குள் மாறுபட்ட கருத்து களைக் கொண்டு, இணைய தளத்தில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு பதிலளிப்பது, தனிமனித விருப்பு, வெறுப்பு அடிப்படையிலான செயல் பாடுகளேயன்றி, அவை கட்சிப் பணிகள் அல்ல. மாறாக ஊறு விளைவிக்கக்கூடிய ஆபத்தும் இருக்கிறது.

எனவே, இத்தகைய செயல்பாடுகளை அனைத்து சமூக வலைதளங்களிலும் இணையதளத்திலும் தவிர்க்க வேண்டும். கட்சிக்கும், கருணா நிதிக்கும் பெருமை சேர்க்கும் பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மாற்றுக் கட்சியினரும் எதிரிகளும் நம் மீது சுமத்தும் அவதூறுகளை பொடிப்பொடியாக்கிடும் விதத்தில் உண்மைத் தகவல்களை இணையதளத்தில் உடனுக்குடன் பதிய வேண்டும். பெரியார், அண்ணா போன்ற இயக்கத்தின் பெரும் தலைவர்களும் அவர்களுக்குத் துணையாக பாடுபட்ட தலைவர்களும், சமுதாய உயர் வுக்காக பாடுபட்ட வரலாற்று நிகழ்வுகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.

திமுக ஆட்சியின் சாதனைகளையும், மத்திய அரசிடம் வாதாடி, போராடி தமிழகத்துக்கு கருணாநிதி பெற்றுத்தந்த பலன் களையும் குறிப்பிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்