முக்கிய செய்திகள்:
சமையல் எண்ணெய் லாரி கவிழ்த்தால் ; எண்ணெயைப் பிடிக்க மக்கள் போட்டா போட்டி

விழுப்புரம் அருகே சாலையில் லாரி கவிழ்ந்ததால் கொட்டிய சமையல் எண்ணெயைப் பிடிக்க மக்கள் குவிந்ததால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் தடியடி நடத்தி மக்களைக் கலைத்தனர்.

சென்னையிலிருந்து மதுரைக்கு 12,000 லிட்டர் சுத்திக ரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் ஏற்றிக் கொண்டு லாரி சென்றுக் கொண்டிருந்தது.

விழுப்புரம் அருகேயுள்ள வழுதரெட்டி பகுதியில் சென்ற போது நிலைதடுமாறி லாரி கவிழ்ந்தது. லாரியிலிருந்து சமையல் எண்ணெய் வழிந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் குடம், பாத்திரங்களை எடுத்துவந்து பிடிக்கத் தொடங்கினர். இதனால் சென்னை-விழுப்பு ரம் நெடுஞ்சாலையில் போக்குவ ரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த விழுப்புரம் காவல்துறையினர் மக்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர்.ஆனால், நெரிசல் அதிகரித்ததால், தடியடி நடத்தி மக்கள் கூட்டத்தை கலைத்தனர்.

இச்சம்பவத்தால் சென்னை-விழுப்புரம் சாலையில் சுமார் அரைமணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.கவிழ்ந்து கிடக்கும் லாரியிலிருந்து வழிந்த எண்ணெயைப் பிடிக்க ஆர்வமாக ஓடிய மக்கள் மீது தடியடி நடத்தியது போலீஸ்.

 

மேலும் செய்திகள்