முக்கிய செய்திகள்:
யானை தாக்கி பலியானோர் குடும்பங்களுக்கு நிதிவுதவி : ஜெயலலிதா

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:,கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் துடியலூர் பிரிவு அருகில் தெலுங்குபாளையம் கிராமம், வேலாண்டிபாளையம் வெங்கிட்டாபுரத்தைச் சேர்ந்த கருணாகரன்;

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், நெடுகுளா உள்வட்டம், அல்லிமாயா கிராமம் அருகே தெங்குமரஹடா பகுதியைச் சேர்ந்த அசோகன்;

ஈரோடு மாவட்டம், குத்தியாலத்தூர் காப்புக் காடு பகுதி அருகே குத்தியாலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.சென்னியப்பன் என்பவரின் மகன் நாச்சிமுத்து;

கிருஷ்ணகிரி மாவட்டம், அட்டகுறுக்கி கிராமம், ஒட்டரப்பாளையம் ஏரி அருகே, பண்ணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சின்னவீரப்பா என்பவரின் மகன் வெங்கடேஷ்; ஆகியோர் காட்டு யானைகள் தாக்கியதில் உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், குண்டுபட்டி உடையார் காடு அருகே கூக்கால் கிராமம் உட்கடை, குண்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவரின் மகன் சுரேஷ் காட்டுப் பன்றி தாக்கியதில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

காட்டு யானைகள் தாக்கியதில் அகால மரண மடைந்த கருணாகரன் அசோகன், நாச்சிமுத்து, வெங்கடேஷ் மற்றும் காட்டுப் பன்றி தாக்கியதில் அகால மரணமடைந்த சுரேஷ் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வனத்துறை மூலம் தலா மூன்று லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் கிராமத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் ஆலையில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்த சௌந்திரராஜன் 7.2.2014 அன்று இயந்திரத்தில் பழுது நீக்கும் பணியை மேற்கொண்டிருந்த போது, திடீரென்று இயந்திரம் இயங்க ஆரம்பித்ததில் அதில் சிக்கி பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த சௌந்திரராஜன் குடும்பத்திற்கு முதல்– அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

 

மேலும் செய்திகள்