முக்கிய செய்திகள்:
120 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா

கிருஷ்ணகிரி பழையபேப்டை சுப்பிரமணி மகாலில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அங்கன்வாடி பணியாளர்களால் கிருஷ்ணகிரி நகராட்சி, ஆலப்பட்டி, பெல்லாரம்பள்ளி மற்றும் பந்தாரப்பள்ளி ஆகிய சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

இவ்விழாவிற்கு மாவட்ட திட்ட அலுவலர் புஷ்பலதா தலைமை வகித்தார். ஆற்காட் தொண்டு நிறுவன மேலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக எஸ்.ஐ. பெருமாள் பங்கேற்று வாழ்த்தி பேசினார்.

விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு அங்கானவாடி பணியாளர்கள் மஞ்சள், குங்குமம், பூ வைத்து நலுங்கு வைத்தனர். பின்னர் அவர்களுக்கு வளையல் அணிவித்து, ஐந்து வகை உணவுகள் பரிமாறப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைவருக்கும் தாம்பூழ பை வழங்கப்பட்டது.இவ்விழாவில் சுகாதார பணியாளர்கள் ஜோதிலட்சுமி, லட்சுமி, முனியம்மாள், ஜெயலட்சுமி, மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் தேவகி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்