முக்கிய செய்திகள்:
3–ந்தேதி ஜெயலலிதா சுற்றுப்பயணம்

பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை முதல்– அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும் வருகிற 3–ந் தேதி முதல் ஏப்ரல் 5–ந்தேதி வரை தமிழகம் முழுவதும் தனது முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.முதல் – அமைச்சர் ஜெயலலிதா 3–ந்தேதி காஞ்சீபுரத்தில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

காஞ்சீபுரம் தேரடி திடலில் நடக்கும் கூட்டத்தில் அவர் பேசுகிறார்.பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் மைத்ரேயன் எம்.பி. செய்து வருகிறார்.காஞ்சீபுரம் நசரத்பேட்டை பகுதியில் ஹெலிபேட் அமைக்கப்பட உள்ள இடம் மற்றும் பிரசார கூட்டம் நடைபெறவுள்ள இடம் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.

நேற்று அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனு சாமி ஆகியோர் நசரத் பேட்டை பகுதியில் ஹெலிகாப்டர் தளம் அமைய உள்ள பகுதியையும் முதல்– அமைச்சரின் பிரசார கூட்டம் நடைபெறவுள்ள பகுதியையும் பார்வையிட்டனர். கூட்ட ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைகள் நடத்தினர்.

இதில் அமைச்சர் சின்னையா, மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் எம்.எல்.ஏ., வி.சோமசுந்தரம் எம்.எல்.ஏ., மொளச்சூர் பெருமாள் எம்.எல்.ஏ., மாவட்ட பேரவை செயலாளர் கே.யூ.எஸ். சோமசுந்தரம், மாணவரணி செயலாளர் வள்ளிநாயகம், பொதுக்குழு உறுப்பினர் ரங்கநாதன், நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், மைதிலி திருநாவுக்கரசு, தும்பவனம் ஜீவானந்தம், தமிழ்வாணன், ஆர்.வி.ரஞ்சித்குமார், அக்ரிநாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகள்