முக்கிய செய்திகள்:
அ.தி.மு.க.வில் இணைந்தார் வெண்ணிறஆடை நிர்மலா

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இணையும் நிகழ்ச்சி இன்று நடந்தது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா பகல் 12 மணிக்கு தலைமை கழகம் வந்தார். அவரை அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றனர்.

ஜெயலலிதா முன்னிலையில் பல்வேறு கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஏற்பாட்டின் பேரில் முன்னாள் எம்.பி. ப.ராமநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி, பல்லாவரம் நகர தே.மு.தி.க. தலைவர் அசோக் உள்பட 300 தே.மு.தி.க.வினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா முதல்–அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ. கம்பம் ஆர்.டி.கோபாலன், ஈரோடு மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.கே.சின்னசாமி, கே.எஸ். பழனிச்சாமி, பி.மாரப்பன் ஆகியோரும் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.ஜெயபாலன், எம்.ஜி.ஆர். கழக தலைமை நிலைய செயலாளர் பா.ராஜ்குமார், கலைமாமணி நகர் டி.எஸ்.மகாலிங்கம் பேரன் எஸ். ராஜேஸ்வரன் ஆகியோரும் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

அ.தி.மு.க. மருத்துவ அணி செயலாளர் மைத்ரேயன் எம்.பி. ஏற்பாட்டின்பேரில் உ.பி., குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 193 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.இதே போல் தே.மு.தி.க., காங்கிரஸ், பா.ம.க.வைச் சேர்ந்த 300–க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சிகளை இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.கட்சியில் இணைந்தவர்களை வாழ்த்தி முதல்– அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

 

மேலும் செய்திகள்