முக்கிய செய்திகள்:
தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

தமிழக முதலமைச்சரின் பிறந்த நாளினை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், அரியலூர் பேருந்து நிலையத்தில, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசு சாதனை விளக்க புகைப் படக்கண்காட்சியை மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல் ராஜ் திறந்து வைத்து தலைமை வகித்து பார்வையிட்டார்.அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் துரை.மணி வேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இப்புகைப் படக்கண்காட்சி யில் தமிழக முதலமைச்சர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், அன்னை தெரசா மற்றும் தலைவர்களுடன் உள்ள புகைப்படங்கள் இடப்பெற்றுள்ளன.

மேலும் தமிழக அரசின் சிறப்பு திட்டங்களான விலை யில்லா கறவைப்பசுகள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், விலையில்லா மடிக் கணினி, மிதிவண்டிகள் வழங்கும் திட்டம், திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், முதியோர் உதவித் தொகை, பசுமை வீடுகள் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகளை தமிழக முதலமைச்சர் பயனாளிகளுக்கு வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் இக்கண்காட்சி அரங்கில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப் பட்டிருந்தது. இப்புகைப் படக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டனர்.

இப்புகைப் படக்கண் காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர் எ.சரவண வேல்ராஜ் இனிப்பு வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கருப்ப சாமி, ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குநர் சடையப்ப விநாயக மூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் கணபதி, வட்டாட்சியர் முருகன், மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் அன்பழகன் மற்றும் அலுவலர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகப் பணியாளர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) க.சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

 

மேலும் செய்திகள்