Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/content/55/10886855/html/makkalkattalai/tamizhagatimes/adminpanel/inc/config.php on line 12
அதிமுக வேட்பாளர் பெயர் வெளியீடு - Tamizhaga Times
முக்கிய செய்திகள்:
அதிமுக வேட்பாளர் பெயர் வெளியீடு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா தனது 66–வது பிறந்த நாளையொட்டி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கை அசைத்து வாழ்த்து தெரிவித்தார். பிறகு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:–

1. திருவள்ளூர் (தனி)– டாக்டர் பி.வேணுகோபால் (கழக மருத்துவ அணி செயலாளர்)

2. வடசென்னை– டி.ஜி. வெங்கடேஷ்பாபு (வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர்)

3. தென்சென்னை– டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன் (தெற்கு லீத் கேஸ்டில் தெரு, ராஜா அண்ணாமலை புரம்)

4. மத்திய சென்னை –எஸ்.ஆர்.விஜயகுமார் (கழக மாணவர் அணி செயலாளர்)

5. ஸ்ரீபெரும்புதூர்– கே.என்.ராமச்சந்திரன் (காஞ்சீபுரம் மத்திய மாவட்ட கழக அவைத்தலைவர்)

6. காஞ்சீபுரம் (தனி) – திருமதி. மரகதம் குமாரவேல் (திருப்போரூர் ஒன்றிய இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர்)

7. அரக்கோணம் – திருத்தணி கோ.அரி (திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்)

8. வேலூர் – பா. செங்குட்டுவன் (வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுஇணை செயலாளர்)

9. கிருஷ்ணகிரி – கே. அசோக்குமார் (கிருஷ்ணகிரி மாவட்ட கழக அவைத் தலைவர்)

10. தருமபுரி– பி.எஸ். மோகன் (தருமபுரி வழக்கறிஞர் பிரிவு செயலாளர்)

11. திருவண்ணாமலை – திருமதி ஆர்.வனரோஜா (திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர்

12. ஆரணி– செஞ்சி சேவல் வே.ஏழுமலை (விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்)

13. விழுப்புரம் (தனி) – எஸ்.ராஜேந்திரன் (விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாயி அணி செயலாளர்)

14. கள்ளக்குறிச்சி – டாக் டர் க.காமராஜ் (விழுப்புரம் தெற்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர்)

15. சேலம் – வி.பன்னீர் செல்வம் (சேலம் மாநகர் மாவட்ட கழக துணை செயலாளர்)

16. நாமக்கல் – பி.ஆர். சுந்தரம் (நாமக்கல் மாவட்ட கழக அவைத்தலைவர்)

17. ஈரோடு – எஸ்.செல்வ குமார சின்னையன் (ஈரோடு மாநகர மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர்)

18. திருப்பூர் – திருமதி வி.சத்தியபாமா (தலைமை கழக செயற்குழு உறுப்பினர்– ஈரோடு புறநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர்)

19. நீலகிரி (தனி) – டாக்டர் சி.கோபாலகிருஷ்ணன் (குன்னூர் நகரமன்ற தலைவர்)

20. கோவை – ஏ.பி. நாகராஜன் (கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர்)

21. பொள்ளாச்சி – சி. மகேந்திரன் (திருப்பூர் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்)

22. திண்டுக்கல் – எம். உதயகுமார் (நிலக்கோட்டை பேரூராட்சி கழக செயலாளர்)

23. கரூர் – டாக்டர் மு. தம்பித்துரை (கழக கொள்கை பரப்பு செயலாளர்)

24. திருச்சி – ப.குமார் (கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர், கழக மனுக்கள் பரிசீலனை குழு உறுப்பினர்)

25. பெரம்பலூர் – ஆர்.பி. மருதைராஜ் என்ற மருதராஜா (பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாளர்)

26. கடலூர் – ஆ.அருண்மொழி தேவன் (கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர்)

27. சிதம்பரம் (தனி) – மா.சந்திரகாசி (பெரம்பலூர் விவசாய பிரிவு செயலாளர்)

28. மயிலாடுதுறை – ஆர்.கே.பாரதிமோகன் (திருப்பனாந்தாள் ஒன்றிய கழக செயலாளர்)

29. நாகப்பட்டினம் (தனி) – டாக்டர் கே.கோபால் (திருவாரூர் மாவட்ட மருத்துவ அணி செயலாளர்)

30. தஞ்சை – கு.பரசுராமன் (தஞ்சை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்)

31. சிவகங்கை – பி.ஆர்.செந்தில்நாதன் (சிவகங்கை கழக மாவட்ட செயலாளர்)

32. மதுரை – இரா. கோபாலகிருஷ்ணன் (மதுரை மாநகராட்சி துணை மேயர்)

33. தேனி – ஆர்.பார்த் திபன் (தேனி மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்)

34. விருதுநகர் – டி.ராதா கிருஷ்ணன் (விருதுநகர் மாவட்ட கழக துணை செயலாளர்)

35. ராமநாதபுரம் –அ. அன்வர்ராஜா (கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர்)

36. தூத்துக்குடி – ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர்)

37. தென்காசி (தனி) – திருமதி.வசந்திமுருகேசன் (திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக இணை செயலாளர்)

38. நெல்லை – கே.ஆர்.பி.பிரபாகரன் (ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கழக செயலாளர்)

39. கன்னியாகுமரி – டி.ஜாண்தங்கம் (கன்னியா குமரி மேற்கு மாவட்ட செயலாளர்)

40. புதுச்சேரி –எம்.வி.ஓமலிங்கம் (காரைக்கால் மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)

இவ்வாறு முதல்– அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

பிறகு முதல்–அமைச்சர் ஜெயலலிதா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு பற்றி பேசப்பட்டு வருகிறது. தொகுதி உடன்பாடு ஏற்பட்ட பிறகு அந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் அறிவிக்கப்படும். அந்த தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள கழக வேட்பாளர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளப்படுவார்கள் என்றார்.

மேலும் செய்திகள்