முக்கிய செய்திகள்:
ஜெயலலிதா சூறாவளி பிரசார தேதி அறிவிப்பு

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:,

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அ.தி.மு.க பொதுச் செயலாளர், முதல்– அமைச்சர் ஜெயலலிதா, முதல் கட்டமாக மார்ச் 3–ந்தேதி முதல் ஏப்ரல் 5–ந்தேதி வரை தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு கழக வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரச்சாரச் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

அவரது சுற்றுப்பயணம் வருமாறு:–

மார்ச் 3–ந்தேதி: காஞ்சிபுரம் (தனி)–தேரடி, காஞ்சிபுரம் நகரம்,

4–ந்தேதி: ஸ்ரீபெரும்புதூர்–ஜெயின் கல்லூரி வளாகம், மீனம்பாக்கம்

6–ந்தேதி: நாகப்பட்டினம் (தனி)–அவரித் திடல், நாகப்பட்டினம்,

மயிலாடுதுறை– காளஹஸ்திகாபுரம் ஊராட்சி, செம்பனார்கோவில் ஒன்றியம்

9–ந்தேதி: கன்னியாகுமரி–நாகராஜா திடல், நாகர்கோவில்

11–ந்தேதி: சிதம்பரம் (தனி)–சிதம்பரம் கீழ வீதி, சிதம்பரம்

13–ந்தேதி: ஈரோடு– சித்தோடு நால்ரோடு, சித்தோடு பேரூராட்சி

15–ந்தேதி: கள்ளக்குறிச்சி–ஆற்காடு மில், உலகங்காத்தான் ஊராட்சி, சின்ன சேலம் ஒன்றியம்

18–ந்தேதி: ராமநாதபுரம், அரண்மனை முன்பு, ராமநாதபுரம் நகரம்

19–ந்தேதி: திருச்சிராப் பள்ளி–தென்னூர் உழவர் சந்தை, திருச்சி

21–ந்தேதி: விருதுநகர்– குறுக்குப் பாதை, சிவகாசி விருதுநகர் நெடுஞ்சாலை -அருகில், சிவகாசி நகரம்

சிவகங்கை–காந்தி திடல், மகர நோன்பு -கொட்டல், காரைக்குடி

23–ந்தேதி: புதுச்சேரி– ஏ.எப்.டி. மைதானம், கடலூர் சாலை, உப்பளம்

25–ந்தேதி: திண்டுக்கல்– அங்குவிலாஸ் விளையாட்டுத் திடல், பழனி ரோடு, திண்டுக்கல்

28–ந்தேதி: வேலூர்– காட்டுக்கொல்லை, இடையன்காடு ஊராட்சி, அணைக்கட்டு ஒன்றியம்

ஏப்ரல் 1–ந்தேதி: தூத்துக்குடி–அண்ணாநகர் மெயின் ரோடு, தூத்துக்குடி

2–ந்தேதி: தேனி–தேனி பைபாஸ் ரோடு, தேனி நகரம்

5–ந்தேதி தென்காசி (தனி) வடக்குமாசி வீதி, சங்கரன்கோவில்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்