முக்கிய செய்திகள்:
பார்வதி கிருஷ்ணன் மரணம்: கருணாநிதி இரங்கல்

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான பார்வதி கிருஷ்ணன் டாக்டர் சுப்பராயனின் திருமகள் ஆவார். விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த நேரத்தில், பார்வதி கிருஷ்ணன் தலைமறைவாக இருந்து தொடர்ந்து கட்சிப் பணியாற்றியவர். ஏ.ஐ.டி.யூ.சி.யின் தேசிய செயலாளராகவும், நாடாளு மன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவரது மறைவால் வருந்தும் அவருடைய குடும்பத்தினருக்கும், கட்சித் தோழர்களுக்கும் என் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்