முக்கிய செய்திகள்:
புதிய வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்-கட்டிடங்கள்:ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:,திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் 66 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட இணைப் போக்குவரத்து ஆணையர் (செயலாக்கம்) அலுவலகத்தை முதல்– அமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

சென்னையில் 68 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட இணைப் போக்குவரத்து ஆணையர் (செயலாக்கம்) அலுவலகம்,வேலூரில் 57 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட துணைப் போக்குவரத்து ஆணையர் அலுவலகம், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர், கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் தலா 31 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய், என மொத்தம் 1 கோடியே 25 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பகுதி அலுவலகங்கள,காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் 71 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் ,கோயம்புத்தூர் மேற்கில் 46 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், சேலம் மாவட்டம், சேலம் தெற்கு 56 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஈரோடு மாவட்டம், ஈரோடு மேற்கு 66 லட்சத்து 96 ரூபாய் மதிப்பீட்டிலும் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள்,

கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் ஆணையர் அலுவலகங்களை தலா 5 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய், என மொத்தம் 11 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் துணைப் போக்குவரத்து ஆணையர் அலுவலக நிலையிலிருந்து இணைப் போக்குவரத்து ஆணையர் அலுவலகங்கள், சோழிங்கநல்லூர், அம்பத்தூர், வாணியம்பாடி, மயிலாடுதுறை மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய இடங்களில் 2 கோடியே 77 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பகுதி வட்டாரப் பகுதி அலுவலக நிலையிலிருந்து தரம் உயர்த்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள்,

அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு 1 கோடியே 36 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் காத்திருப்பு அறை, மோட்டார் வாகன ஆய்வாளர் அறை, பழகுநர், ஓட்டுநர் உரிமம் வழங்கும் அறை, கணினி அறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கட்டடம், கரூர் மாவட்டம், குளித்தலை பகுதி அலுவலகத்திற்கு 73 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதி அலுவலகத்திற்கு 77 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடம, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதி அலுவலகத்திற்கு 1 கோடியே 44 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடம்,

என மொத்தம் 12 கோடியே 80 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், தரம் உயர்த்தப்பட்ட அலுவலகங்கள் மற்றும் புதிய கட்டடங்களை முதல்– அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில், அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, முதன்மைச் செயலாளர் பிரபாகர ராவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்