முக்கிய செய்திகள்:
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் அரசியல் மாநாடு:என்.ஆர்.தனபால் அறிவிப்பு

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நெல்லையில் நடைபெறவிருக்கிறது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் முதல் அரசியல் மாநில மாநாடு குமரிக்கும் முன் வள்ளியூரில் வருகின்ற 23ம் தேதி ஞாயிற்று கிழமைமாலையில் நடைபெற இருக்கிறது. பார்ப்பவர் எண்ணம் படபடக்க வள்ளியூர் ஜொலிக்கும் வண்ணம் உள்ளது. பெருந்தலைவர் மக்கள் கட்சி என்றால் இளைஞர் படைமட்டுமின்றி ஆன்றோர், சான்றோர்,வணிகர்கள்,சமுக ஆர்வலர்கள், மனித நேயமிக்க பண்பாளர்கள், நாட்டின் நலம் கருதுபவர்கள்,சுயலமற்றோர் எனும் பலர் எழுச்சியுடனும்,மகிழ்ச்சியுடனும் வருகின்றனர்.நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கின்ற இந்த நேரத்தில் ஊழல் வாதிகளையும்,மதவாத சக்திகளையும் காமராஜர் வாழ்ந்த மண்ணில் கால்ஊன்ற விட மாட்டோம் என்ற உறுதியுடன் பெருந்தலைவரின் பெரும் படை தயாராக இருக்க வேண்டும்.

கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு,பதவிக்காக உதறிவிட்டு,ஓடிப்போன கூட்டம் அல்ல இது,நாட்டு மக்கள் நலம் கருதி
சுய சிந்தனையுடன் நல்வழி காட்ட புறப்பட்ட இயக்கம் இது. அனைவருக்கும் உரிமை உள்ள கூட்டம் இது.பிடி அரிசி திட்டத்தை
நடத்திய கூட்டம் இது ஆகவே மக்கள் பணியாற்ற மீண்டும் காமராஜர் கனவை நனவாக்க வாருங்கள் இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்

 

 

மேலும் செய்திகள்