முக்கிய செய்திகள்:
அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக சுவாமிநாதன் நியமனம்

சென்னை நுங்கம்பாக்கம் அவென்யூ ரோட்டில் உள்ள சாந்தி நிகேதன் அபார்ட்மென்டில் வசித்து வருபவர் கே.சுவாமிநாதன். இவர் இன்று காலை முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தன்னை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

இதற்கிடையே அ.தி.மு.க. வின் ஒரு அங்கமாக "தகவல் தொழில் நுட்பப்பிரிவு" என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டது. அந்த பிரிவுக்கு கே.சுவாமிநாதனை செயலாளராக நியமனம் செய்து ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

அ.தி.மு.க.வின் ஓர் அங்கமாக 'தகவல் தொழில் நுட்பப் பிரிவு' என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டு அதன் செயலாளராக கே.சுவாமிநாதன், (சாந்திநிகேதன் அபார்ட்மென்ட், அவென்யூ ரோடு, நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு பகுதி, தென் சென்னை வடக்கு மாவட்டம்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.கழக உடன் பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்