முக்கிய செய்திகள்:
சென்னை மாநகர காவல் திருத்த மசோதா:ஜெயலலிதா தாக்கல்

சட்டசபையில் இன்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒரு சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். 2014–ம் ஆண்டு சென்னை மாநகர காவல் (சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி மாநகரங்களுக்கு நீட்டிப்பு) திருத்த சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதாக முதல்– அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதில் கூறி இருப்பதாவது:–

19–12–2012 அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் அலுவலர்களின் மாநாட்டின்போது சேலம் மாநகருக்கு பக்கத்தில் உள்ள கொண்டலாம்பட்டி இரும்பு தொழிற்சாலை, வீராணம் காவல் நிலையங்கள் மற்றும் 14 தாய் கிராமங்கள் சேலம் மாநகரத்துடன் இணைக்கப்படும் என்று முதல்–அமைச்சர் அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்புக்கு செயல் திறன் கொடுக்கும் வகையில் 1888–ம் ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டத்தில் சென்னை மாநகரகம் என்ற விளக்கத்தின் வரிசைகளின் பேரில் 1997–ம் ஆண்டு சென்னை மாநகர காவல் (சேலம், திருச்சி, திருநெல்வேலி மாநகரங்களுக்கு நீட்டிப்பு) சட்டத்தின் 2–ம் பிரிவின் 1–ம் கூறினை திருத்துவதென முடிவு செய்துள்ளது. இச்சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்