Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/content/55/10886855/html/makkalkattalai/tamizhagatimes/adminpanel/inc/config.php on line 12
சாலைகள் பராமரிப்பை தனியாரிடம் விடும் திட்டத்தை கைவிட வேண்டும்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை - Tamizhaga Times
முக்கிய செய்திகள்:
சாலைகள் பராமரிப்பை தனியாரிடம் விடும் திட்டத்தை கைவிட வேண்டும்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

சாலைப் பராமரிப்பை தனியார் மயமாக்குவதற்கான விதை கடந்த தி.மு.க. ஆட்சியில் தான் ஊன்றப்பட்டது. அப்போதே இத்திட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதையும் மீறி சில சாலைகளின் பராமரிப்புப் பணிகள் மட்டும் சோதனை அடிப்படையில் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட எந்த சாலையிலும் பராமரிப்பு பணி சரிவர மேற்கொள்ளப்படாததால் அவை மோசமான நிலையில் உள்ளன.

அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு பொள்ளாச்சி மண்டலத்தில் உள்ள 400 கி.மீ நீளமுள்ள சாலைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 10,000 கி.மீ. நீளமுள்ள மாநில மற்றும் மாவட்ட சாலைகளின் மேம்பாட்டு மற்றும் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது மாநில நெடுஞ் சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் தனியார் மயமாக்கப்பட்டால், மாநில சாலை பராமரிப்பில் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்.சாலைகளின் பராமரிப்பு தனியாரிடம் விடப்பட்டால் ஏற்கனவே அந்தப் பணியை செய்து வரும் மாநில நெடுஞ்சாலைத்துறை செயலிழந்துவிடும்; அதில் பணியாற்றும் அதிகாரிகளும், பணியாளர்களும் வேலை இழப்பார்கள்.

சாலை பராமரிப்பிற்கான தொகையை ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு மட்டுமே தமிழக அரசு வழங்கும். அதன் பின்னர், அந்தப் பணியை தனியார் நிறுவனங்களே மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், அவர்கள் சாதாரண சாலைகளில் கூட சுங்கச் சாவடி அமைத்து சாலைகளை பயன்படுத்துவோரிடம் கட்டணம் வசூலிக்கும் ஆபத்து உள்ளது.

தமிழக நெடுஞ்சாலைத் துறை அனுபவம் மிக்கதாகும். பாம்பன் பாலம் உள்ளிட்ட கட்டுமானக் கலையின் அடையாளங்களாக திகழும் பல்வேறு முக்கியப் பாலங்கலையும், சாலைகலையும் அமைத்தது மாநில நெடுஞ்சாலைத்துறை தான். இதையெல்லாம் கருத்தில் கொண்டு, மாநில, மாவட்ட சாலைகளை பராமரிக்கும் பணியை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்

 

மேலும் செய்திகள்