முக்கிய செய்திகள்:
விசாரணை கைதி மரணம்:ஜெயலலிதா நிதி உதவி

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம், பேரளம் சரகம், நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 3.1.2014 அன்று 5 பேர்களை அந்தக் கிராமத்தில் காவல் துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில் மாரிமுத்து என்பவரின் மகன் பிரவீன் பூச்சிக் கொல்லி மருந்தினை அருந்தி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பிரவீன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பிரவீன் குடும்பத்திற்கு முதல்– அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்– அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

 

மேலும் செய்திகள்