முக்கிய செய்திகள்:
ராஜபக்சேவை எதிர்த்து தமிழர்கள் போராட வேண்டும்: வைகோ அறிக்கை

காமன்வெல்த் தலைவராக ராஜபக்சே பதவி ஏற்பதை எதிர்த்து போராட வேண்டும் என்று வைகோ கூறினார்.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:,

இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜெர்மனியின் ஹிட்லரின் நாஜி படைகள் கூட செய்யாத மிகக் கொடூரமான அழிவுகளை ஈழத் தமிழர்களுக்கு சிங்கள பேரினவாத அரசின் ராணுவத்தினர் செய்தனர்.ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க இந்த இனக்கொலை குற்றத்துக்கு ‘சுதந்திரமான அனைத்துலக நீதி விசாரணை வேண்டும்’ என்ற ஆவேச முழக்கம், மார்ச் 10 ஆம் தேதி ஜெனீவாவில் முருகதாசன் திடலில் விண்முட்ட எழுவதற்கு புலம்பெயர்வாழ் ஈழத் தமிழர்கள் சங்கமிக்க உள்ளனர்.

அதற்கு ஆயத்தப்படுத்தவும், நீதி கேட்கும் குரல் உலகெங்கிலும் ஒலிக்கவும் பிப்ரவரி 26 ஆம் தேதி, தாய்த் தமிழகத்திலும், தரணி எங்கும் தன்மானத் தமிழர்கள் சாதி, மதம், கட்சிகள் கடந்து நீதி கேட்கும் போர் முழக்கத்தை எழுப்பிட தயாராகிக்கொண்டுள்ளனர்.இந்தச் சூழலில், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே மார்ச் 10 ஆம் தேதி லண்டனில் காமன்வெல்த் அமைப்பின் தலைவராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்க திட்டமிட்டுள்ளார். கூண்டில் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டிய ராஜபக்சேவுக்கு காமன்வெல்த் அமைப்பு தலைவனாக முடிசூட்டியது மன்னிக்க முடியாததாகும்.

முருகதாசன் தீக்குளித்து மடிந்த மார்ச் 10 ஆம் தேதியில், தமிழர்கள் ஜெனீவாவில் நீதி கேட்டு அறப்போர் நடத்தும் நாளில், லண்டனில் பதவியேற்பு விழாவுக்கு திட்ட மிட்டுள்ளார்.முன்பு லண்டன் மாநகரிலே ஈழத் தமிழர்கள் ஆர்த்தெழுந்து சிங்கள அதிபரை விரட்டி அடித்த அதே பாடத்தை மீண்டும் புகட்ட வேண்டும். ‘பிரித்தானிய மண்ணுக்குள் நுழையாதே! இங்கிலாந்து அரசே இந்த அநீதிக்குத் துணைபோகாதே!’ எனும் அறப்போருக்கும் லண்டன் வாழ் தமிழர்கள் ஆர்த்தெழ வேண்டுகிறேன்.இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.

 

மேலும் செய்திகள்