முக்கிய செய்திகள்:
தமிழக அரசு பட்ஜெட் மக்களை தாக்கியுள்ள பட்ஜெட்:கருணாநிதி

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் சூழ்நிலை உள்ளது. இதற்காக டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை விஜயகாந்த் சந்திக்க உள்ளார். அதேசமயம் தி.மு.க.வும் அந்த கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் இதனை தி.மு.க. மறுத்துள்ளது.

திருச்சி மாநாட்டுக்குப் புறப்படும் முன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க. தலைவர் இதுபற்றி கூறுகையில், “தே.மு.தி.க., காங்கிரசுடன் கூட்டணிக்கான அறிகுறியோ, சூழ்நிலையோ இல்லை. திருச்சி மாநாடு என்றாலே திருப்பு முனைதான். எனவே, இந்த மாநாடு தி.மு.க.விற்கு திருப்புமுனையாக அமையும்” என்றார்.தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மக்களை தாக்கியுள்ள பட்ஜெட் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

 

மேலும் செய்திகள்