முக்கிய செய்திகள்:
கூட்டணி பற்றி பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த தே.மு.தி.க மாநாட்டில் முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகளை திட்டி பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கை சட்டப்படி சந்திப்பேன். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா?

தனித்து போட்டியிடுவதா? என்பது பற்றியும், கூட்டணி அமைத்தால் யாருடன் கூட்டணி என்பது பற்றியும் விஜயகாந்த் அறிவிப்பார். ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்த நரேந்திரமோடிக்கு தான் தகுதி இருப்பதாக இல.கணேசன் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து.இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்