முக்கிய செய்திகள்:
53 ஆயிரம் ரூபாய் வீதம் 2.12 லட்சம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் பொருத்திய ஸ்கூட்டர்களை:மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கொளத்தூர் எம்.எல்.ஏ. மு.க.ஸ்டாலின் தமது சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ.5 லட்சம் வீதம், ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.அந்த நிதியிலிருந்து, முதற்கட்டமாக கொளத்தூர் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் இரு கால்களும் பாதிக்கப்பட்ட சுய தொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் நான்கு பேர்களுக்கு, தலா 53 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 2.12 லட்சம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் பொருத்திய ஸ்கூட்டர்களை மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்தப் பேட்டியில் மு.க.ஸ்டாலின் கூறியாவது:–

1996ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் ஆட்சியில் இருந்த போது, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.கடந்த மூன்று ஆண்டு களில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆண்டுக்கு ரூ.2 கோடி வீதம் 6 கோடியில், ரூ. 5.64 கோடி ஒதுக் கீடு செய்யப்பட்டு, அப்பணிகளுக்கான திட்டங்கள், பேருந்து நிலையத்திற்கு சில வசதிகள், நிழற்குடை அமைத்தல், அங்கன்வாடி மற்றும் சத்துணவுக் கூடங்கள் கட்டுதல், சமூக நலக்கூடங்கள் கட்டுதல், இடுகாட்டிற்கு அடிப்படை வசதிகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு, மழைநீர் வடிகால்வாய் அமைத்தல், சாலைகள் சீரமைத்தல், மாநகராட்சியில் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல், அரசு மருத்துவமனைக்கு சோலார் வசதி பொருத்துதல் என பல்வேறு பணிகளுக்கு பரிந்துரைக் கடிதங்கள் அனுப்பப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த ரூ. 5.64 கோடி நிதியிலிருந்து இதுவரை ரூ.18 லட்சம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு, 66–வது வார்டு, கிருஷ்ணா நகரில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கீடு செய்யப்பட்ட எஞ்சியுள்ள ரூ. 5.46 கோடி மதிப்பிலான திட்டம் இது வரையில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

இது தொடர்பாக, சட்ட மன்றத்திலும் பேசிட அனு மதிப்பதில்லை. பேச முயற்சித்தால் அவையிலிருந்து வெளியேற்றப்படுகிறோம். எனவே சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து, இந்தப் பிரச்சினை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாமா? என ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்