முக்கிய செய்திகள்:
விஜயகாந்த்–பிரேமலதா மீது வழக்கு

தே.மு.தி.க சார்பில் கடந்த 2ம் தேதி விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, அருட்செல்வன், எல்.வெங்கடேசன் ஆகியோர் பேசினார்கள்.

அவர்கள் 5 பேரும் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க., தொகுதி இணை செயலாளர் வக்கீல் ஜி.மணிராஜ் சார்பில் அ.தி.மு.க., வழக்கறிஞரணி மாவட்ட இணைச் செயலாளர் வக்கீல் வேதகரி உளுந்தூர்பேட்டை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி முத்துராமன் ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்தினார். இந்த மனு மீதான மறு விசாரணையை வருகிற 11–ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினம் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள மாவட்ட கவுன்சிலர் எம்.கோதண்டபாணி, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ஜி.குணசேகரன், பேரவை ஒன்றிய இணைச் செயலாளர் பூட்டோ, பேரவை ஒன்றிய துணை செயலாளர் கூத்தனூர் வெங்க டேசன், வடமாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வி.எம்.ஏழுமலை ஆகியோர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்கின்றனர்.

 

மேலும் செய்திகள்