முக்கிய செய்திகள்:
திமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் துறை முருகன் மகன் போட்டி?

தி.மு.க. கூட்டணியில் உள்ள யூனியன் முஸ்லிம்லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளும் வேலூர் தொகுதியை குறி வைத்துள்ளன. முஸ்லிம் ஓட்டுகள் கணிசமாக உள்ள இந்த தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு வேலூர் தொகுதியை ஒதுக்கிய தி.மு.க. இந்த முறை நேரடியாக தி.மு.க. வேட்பாளரையே களத்தில் இறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்தை வேலூர் தொகுதியில் களத்தில் இறக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

காட்பாடியில் என்ஜினீயரிங் கல்லூரி நடத்தி வரும் கதிர்ஆனந்த் முதன் முதலாக போட்டியிடுவதன் மூலம் அரசியலில் கால்பதித்து தந்தையை போல் பெயர் வாங்குவார் என தி.மு.க.வினர் கூறுகின்றனர்.

கதிர்ஆனந்த் வேலூரில் போட்டியிட வேண்டும் என தி.மு.க.வினர் பலர் விருப்ப மனு செய்து பணம் கட்டியுள்ளனர். வேலூர் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கணித்து கதிர்ஆனந்தை களம் இறக்க திட்டமிட்டுள்ளனர்.

காட்பாடியில் கடந்த மாதம் கதிர்ஆனந்த் பிறந்த நாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. எப்போதும் இல்லாத அளவுக்கு சாலைகளில் டிஜிட்டல் பேனர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.காட்பாடி சட்டமன்ற தொகுதி அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் வருகிறது. இதனால் தி.மு.க.வினருக்கு கதிர்ஆனந்த் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடாதது வருத்தம் கொடுத்துள்ளது.

கதிர்ஆனந்த் போட்டியிடுவது உறுதியாகி விட்டதால் வேலூர் தொகுதியில் உள்ள தி.மு.க. நிர்வாகிகளை துரைமுருகன் சந்தித்து ஆலோசனைகள் வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.கதிர்ஆனந்த் களமிறக்கப்பட்டால் அவருக்கு நிகரான வேட்பாளரை நிறுத்த அ.தி.மு.க. மேலிடமும் ஆலோசித்து வருகிறது. பா.ம.க., பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்தால் வேலூரை பா.ஜ.க.வுக்கு கொடுத்துவிட்டு வேலூரில் போட்டியிடுவதை தவிர்த்துவிடும் என அரசியல் பிரமுகர்கள் கூறுகின்றனர்.

 

மேலும் செய்திகள்