முக்கிய செய்திகள்:
விழுப்புரம் கோர்ட்டில் பொன்முடி ஆஜர்

தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி, சிகாகல்வி அறக்கட்டளை தலைவர் மணிவண்ணன் ஆகிய 3 பேர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2003 ம் அண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து இந்த வழக்கை மீன்டும் விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை தொடங்கியது. இன்று இந்த வழக்கு விசாரணை நடந்தது.இதையொட்டி கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, சிகா கல்வி அறக்கட்டளை தலைவர் மணிவண்ணன் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். வழக்கை நீதிபதி வெற்றிசெல்வி விசாரித்தார். வருகிற 18 ந் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

 

மேலும் செய்திகள்