முக்கிய செய்திகள்:
அண்ணா நினைவிடத்தில் ஜெயலலிதா மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 45 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முதல் அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா காலை 11 மணிக்கு வந்தார்.அப்போது அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் புரட்சித்தலைவி வாழ்க என்று கோஷமிட்டனர்.

முதல் அமைச்சரை அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், ஆர்.வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் அழைத்து சென்றனர். அண்ணா நினைவிடத்தில் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.

அப்போது அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியனிடம் ஜெயலலிதா நலம் விசாரித்தார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மோகன், பா.வளர்மதி, பழனியப்பன், ஆர்.பி.உதயகுமார், எம்.பி.க் கள் சசிகலா புஷ்பா, ஏ.கே.செல்வராஜ், ரத்தினவேலு, விஜிலா சத்தியானந்த், முத்துகருப்பன், செம்மலை, மேயர் சைதை துரைசாமி.

மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வி.பி.கலை ராஜன், வெங்கடேஷ்பாபு, வி.என்.ரவி, சிறுபான்மை பிரிவு தலைவர் அன்வர்ராஜா, விசாலாட்சி நெடுஞ்செழியன், பி.எச்.பாண்டியன், பொன்னையன், வாரிய தலைவர் தமிழ்மகன்உசேன், பரிதி இளம்வழுதி, எம்.எல்.ஏ.க்கள் டி.ஜெயக்குமார், செந்தமிழன், வைகைச் செல்வன், கோகுலஇந்திரா, கவுன்சிலர்கள் சிவராஜ், சின்னையன், வடபழனி கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகள்