முக்கிய செய்திகள்:
அதிமுக-இ.கம்யூனிஸ்ட் இடையே கூட்டணி:ஜெயலலிதா அறிவிப்பு

தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன், தேசிய செயலாளர் சுதாகர் ரெட்டி மற்றும் மாநில செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர்.

இப்பேச்சுவார்த்தை சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன் முடிவில், நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-இ.கம்யூனிஸ்ட் இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதாக ஜெயலலிதா அறிவித்தார். மேலும்  அமைதி, வளம் மற்றும் முன்னேற்றம் ஆகியவையே அதிமுக கூட்டணியின் தேர்தல் முழக்கமாக இருக்கும் என அவர் கூறினார்.

பரதன் கூறுகையில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றால் ஜெயலலிதா பிரதமர் ஆவார் என குறிப்பிட்டார். சுதாகர் ரெட்டி கூறுகையில் மதச்சார்பற்ற அரசை மத்தியில் உருவாக்கவே இக்கூட்டணி அமைக்கப்படுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்படும் என்றார்.

நாளை மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரான பிரகாஷ் காரத் ஜெயலலிதாவை சந்திப்பார் என கூறப்படுகிறது. அப்போது அக்கட்சியுடனான கூட்டணி இறுதி செய்யப்படும் என தெரிகிறது.

 

மேலும் செய்திகள்