முக்கிய செய்திகள்:
மதுரை நகரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

மதுரை நகரில் 17 போலீஸ் நிலையங்கள் உள்ளன. ஒரு போலீஸ் நிலையத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்வது வழக்கம். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் வருவதை தொடர்ந்து மதுரை நகரில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:

ஆர்.சதீஷ் (கீரைத்துறை குற்றப்பிரிவு), வி.மோகன் (தல்லாகுளம் சட்டம், ஒழுங்கு), என்.துரைப்பாண்டி (நிலப்பறிப்பு தடுப்பு பிரிவு), எ.மலைச்சாமி (தெற்குவாசல் குற்றப்பிரிவு), பி.முருகதாசன் (அண்ணாநகர் குற்றப்பிரிவு).

ஏ.நாகராஜன் (விளக்குத்தூண் குற்றப்பிரிவு), எம்.ரமணி (தெப்பக்குளம் சட்டம், ஒழுங்கு), பி.செந்தில் குமார் (கீரைத்துறை சட்டம், ஒழுங்கு), ஆர்.விவேகானந்தன் (சைபர் கிரைம்), எஸ்.எம்.மல்லிகா (மகளிர் காவல் நிலையம், மதுரை நகர்), எம்.மகேஷ் (தெற்குவாசல், சட்டம், ஒழுங்கு) பி.பார்த்திபன், (சுப்பிரமணியுபரம் சட்டம், ஒழுங்கு), எம்.ரமேஷ் (எஸ்.எஸ்.காலனி சட்டம், ஒழுங்கு), வி.ரமேஷ் (மாநகர் மத்திய குற்றப்பிரிவு), ஜி.ராஜசேகரன் (மதிச்சியம் சட்டம், ஒழுங்கு), கே.செல்வராஜ் (திலகர் திடல் குற்றப்பிரிவு).

மதுரை நகரிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் தென் மாவட்டங்களில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் பணியில் நியமிக்கப்படுவர் என காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

மதுரைக்கு இடமாறி வருவோர் விவரம்:

மதுரையிலிருந்து 16 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றப்பட்ட நிலையில் வெளி மாவட்டங்களிலிருந்து மதுரை நகருக்கு வருவோர் விவரம் மற்றும் அவர்களின் தற்போதைய பொறுப்பு அடைப்புக்குறிகள்:

ஆர்.சவுந்திரபாண்டியன் (ராமநாதபுரம் நகர், பி.கணேசன் (ராமநாதபுரம் பஜார்), ஆர்.ஜான் கென்னடி (கீழத்தூவல்), சி.முத்துக்குமார் (நெற்குப்பை), எஸ்.சிவகுமார் (சிவகங்கை நகர்), கே.அமுதா (கீழக்கரை மகளிர் காவல் நிலையம்), வி.ஆனந்தன் (கமுதி சர்க்கிள்), பி.சந்திரன் (மானாமதுரை குற்றப்பிரிவு), ஆர்.முருகன் (தொண்டி சர்க்கிள்), பி.சிவராஜ் பிள்ளை (மணவாளக்குறிச்சி, டி.மன்னவன் (குற்றாலம் குற்றப்பிரிவு), டி.சர்க்கரை (சத்திரப்பட்டி) ஆகியோர் மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர

 

மேலும் செய்திகள்