முக்கிய செய்திகள்:
முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் தங்க கவசம் அணிவிக்கிறார்

அ.தி.மு.க. தலைமைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:,தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 30.10.2010 அன்று ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்திற்குச் சென்று தேவர் திருமகனாருக்கு மலர் அஞ்சலி செலுத்திய போது, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிடம் தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்க ஆவன செய்ய வேண்டும் என்று அங்கே குழுமியிருந்த மக்களும், கோவை காமாட்சிபுரி ஆதினம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர சுவாமிகளும் வேண்டுகோள் வைத்தனர்.

அதனை ஏற்றுக் கொண்ட கழகப் பொதுச் செயலாளர், முதல்–அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. சார்பில் தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி தற்போது, தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட உள்ளது. முத்துராமலிங்க திருவுருவ சிலைக்கு 9–ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தங்க கவசம் அணிவிக்கிறார்.இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பொது மக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

 

மேலும் செய்திகள்