முக்கிய செய்திகள்:
மு.க.அழகிரிக்கு அதரவாக திமுக எம்.பிகள்

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி எம்.பி.யின் 63–வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது ஆதரவாளர்கள் தென்மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் திரண்டு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இந்த நிலையில் தி.மு.க. எம்.பி.க்கள் நெப்போலியன் (பெரம்பலூர்), கே.பி.ராமலிங்கம் (மேல்சபை) ஆகியோர் நேற்று மாலை மதுரை வந்தனர். ராமநாதபுரத்தில் இருந்து ரித்தீஷ் எம்.பி. தனது ஆதரவாளர்களுடன் ஏராளமான வாகனங்களில் மதுரை வந்தார். எம்.பி.க்கள் 3 பேரும் மதுரை சத்திய சாய் நகரில் உள்ள மு.க.அழகிரியின் வீட்டுக்கு சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

பின்னர் சுமர் ½ மணி நேரம் மு.க.அழகிரி அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் குறித்து அவர்கள் விவாதித்ததாக தெரிகிறது. மு.க.அழகிரியை சந்தித்து விட்டு வந்த ரித்தீஷ் எம்.பி. கூறியதாவது:–

தென்மாவட்டம் என்றாலே அண்ணன் மு.க.அழகிரிதான். அவர் தான் எல்லாமே. நாங்கள் கடைசி வரை அவருடன் இருப்போம். அவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றார்.நெப்போலியன் எம்.பி. கூறுகையில், நான் கடந்த பல நாட்களாக அமெரிக்காவில் இருந்தேன். அந்த நேரத்தில் தி.மு.க.வில் பல கசப்பான சம்பவங்கள் நடந்ததை அறிந்தேன். இன்று அண்ணன் அழகிரிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்தேன். மு.க.அழகிரி எடுக்கும் முடிவுக்கு எப்போதும் கட்டுப்படுவேன் என்றார்.

கே.பி.ராமலிங்கம் எம்.பி.யிடம் கேட்டபோது, அவர் சிரித்தபடியே கருத்து தெரிவிக்காமல் காரில் ஏறி சென்று விட்டார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் மு.க.அழகிரியை மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சந்திப்பதை தவிர்த்தனர். இந்த நிலையில் எம்.பி.க்கள் 3 பேர் சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பது தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

மேலும் செய்திகள்