முக்கிய செய்திகள்:
அண்ணா நினைவு நாள்: ஜெயலலிதா அஞ்சலி

3–ந்தேதி அண்ணா நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அஞ்சலி செலுத்துகிறார். இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:,

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 45-ஆவது ஆண்டு நினைவு நாளான 3.2.2014 திங்கட்கிழமை அன்று காலை 11 மணி அளவில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவினுடைய நினைவிடத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்– அமைச்சர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 3.2.2014 அன்று ஆங்காங்கே பேரறிஞர் அண்ணாவினுடைய திருவுருவச் சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.கழகப் பொதுச் செயலாளர், முதல்– அமைச்சர் ஜெயலலிதாவின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்