முக்கிய செய்திகள்:
அ.தி.மு.க.நிர்வாகிகளின் மரணத்திற்கு ஜெயலலிதா இரங்கல்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

கர்நாடக மாநிலக் கழக துணைச் செயலாளர் எழிலன், கன்னியாகுமரி கிழக்குமாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் தியாகராஜன், கரூர் மாவட்டம், புஞ்சை புகளூர் பேரூராட்சி எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கணேசன், மகாராஷ்டிர மாநிலம், கோரைக்கான் தொகுதிக் கழகச் செயலாளர் தங்கராஜ் ஆகியோர் மரண மடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு வருத்த முற்றேன்.அன்புச் சகோதரர்கள் எழிலன், தியாகராஜன், கணேசன் மற்றும் தங்கராஜ் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்