முக்கிய செய்திகள்:
130 கோடி மக்களை ஒருங்கினைக்கும் சக்தி இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உண்டு : கே.ஆம்ஸ்ட்ராங் பேச்சு

சென்னை திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 64 வது குடியரசு தின விழா சங்கத்தின் தலைவர் கே.சி.ராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவரும் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞருமான கே.ஆம்ஸ்ட்ராங் பேசுகையில்:.

உலகத்தில் எந்த ஓரு நாட்டிலும் சுதந்திரதிற்கு பின்பு குடியரசு தினம் கொண்டாடபடுவது இல்லை நமது நாட்டில் தான் சுதந்திரம் பெற்று மூன்று ஆண்டுகள் கழித்து குடியரசு தினம் கொண்டாடபட்டது. சாதி,மதம்,மொழியாக பிரிந்து இருக்கும் அணைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் சக்தி நமது இந்திய அரசியலமைப்புக்கு சட்டத்திற்கு உண்டு. 2 கோடி மக்கள் வாழும் இலங்கையில் ஓன்றரை கோடி மக்கள் சிங்களம் பேசுகிறார்கள் ஐம்பது லட்சம் மக்கள் தமிழ் பேசுகிறார்கள் அப்படி இருந்தும் கடந்த 40 ஆண்டுகளாக சம உரிமை  கிடைக்காமல் மக்கள் போராடிவருகிறார்கள். நம்மை விட ஓரு நாள் முன்பு சுதந்திரம் பெற்ற பாகிஸ்தானிலோ ஒரே கடவுள், ஒரே மொழி,ஒரே குரான்,இரண்டே பிரிவு மக்கள்தால் இருக்கிறார்கள் அப்படி இருந்தும் முன்று முறை ராணுவ புரட்சி நடைபெற்றது. 64 நான்கு நிதிபதிகள் அங்கு கைதி செய்யப்பட்டுள்ளனர். ஆனால 130 கோடி மக்களை ஒருங்கினைக்கும் சக்தி நமது நாடிலே இருக்கிறது என்றால் அது இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் மட்டுமே முடிகிறது.இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறை படுத்தப்பட்ட நாள் தான் குடியசு தினமாக நாம் கொண்டாடி வருகிறோம் அத்தகைய சட்டத்தை இயற்றியவர் டாக்டர் அம்பேத்கர் குடியரசு தலைவர் பதவிக்கு சங்மா போட்டியிடுவதற்க்கும் வாய்ப்பு ஏற்படுத்தியது இந்திய அரசமைப்பு சட்டம் தான் என்றார்.

சென்னை திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு தலைவர் கே.சி.ராஜா நினைவு பரிசு வழங்கினார்.இதில் குரு.வே.தட்சணாமூர்த்தி, ஆர்.பால்பாண்டியன், பரமசிவம், தியாகராஜன், ஐய்யனார், பாலமுருகன், ஆர்.ஆனந்தன்,செல்வராஜ்,சொக்கநாதன்,கே.மணிகண்டன்,கார்த்திக் மற்றும் பலர் கலந்துகொண்டனர் இறுதியாக ஆர்.சின்னப்பன் நன்றியுரையாற்றினார்.

 

மேலும் செய்திகள்