முக்கிய செய்திகள்:
கொங்குநாடு மக்கள் கட்சி பொதுக்குழு 29–ந்தேதி கூடுகிறது

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில மாநாடு கடந்த மாதம் திருப்பூர் அருகில் நடந்தது. அதில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பொதுக்குழுவில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்தார்.

இதற்கிடையில் தங்கள் கட்சியின் நீண்டநாள் கோரிக்கைகள் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதாக அவர் கூறினார்.பா.ஜனதா கூட்டணியில் கொ.ம.தே.க. சேருவதாக பேச்சு அடிப்பட்டது. பேச்சு வார்த்தை குழுவினரிடம் பா.ஜ.க. நிர்வாகிகள் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுக்குழு வருகிற 29–ந்தேதி கூடுகிறது. சேலத்தில் பொன்னாக் கவுண்டர் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. அதில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரத்தை பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரனுக்கு வழங்க பொதுக்குழு முடிவு செய்கிறது.

மேலும் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது. பொதுக்குழுவை சென்னையில் கூட்ட முடிவு செய்திருந்த நிலையில் திடீரென சேலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்