முக்கிய செய்திகள்:
மேல்–சபை தேர்தல்:அ.தி.மு.க. வேட்பாளர் மாற்றம்

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,7.2.2014 அன்று நடை பெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்கள் அவைத் தேர்தலை முன்னிட்டு, கழகத்தின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியல் 23.1.2014 அன்று வெளியிடப்பட்டது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு மீண்டும் கூடி மறுபரிசீலனை செய்து, ஏற்கெனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள என்.சின்னத்துரைக்கு பதிலாக ஏ.கே.செல்வராஜ் (கழக அமைப்புச் செயலாளர்) அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்– அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதற்கிடையே சின்னத்துரையை அ.தி.மு.க.வில் இருந்தும் நீக்கி முதல்– அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,கழகத்தின் கொள்கை– குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த என்.சின்னத்துரை (கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்