முக்கிய செய்திகள்:
நெல்லை–தூத்துக்குடி மேயர்கள் ராஜினாமா

டெல்லி மேல்–சபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.

நெல்லை மாநகராட்சி மேயரும், அ.தி.மு.க. மகளிரணியின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளருமான விஜிலா சத்தியானந்த், தூத்துக்குடி மாநகராட்சி மேயரும், அ.தி.மு.க. மகளிரணி மாநில செயலாளருமான சசிகலா புஷ்பா, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் இணைச் செயலாளருமான சின்னத்துரை, நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முத்துக்கருப்பன் ஆகிய 4பேரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

டெல்லி மேல்–சபை தேர்தலில் போட்டியிடுவதால் விஜிலா சத்தியானந்த், சசிகலா புஷ்பா, சின்னத்துரை ஆகிய 3 பேரும் தாங்கள் வகித்துவந்த உள்ளாட்சி பதவிகளை நேற்று மாலை ராஜினாமா செய்தனர்.

நெல்லைமேயர் விஜிலா சத்தியானந்த் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சேவியரிடமும், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் மதுமதியிடமும், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துதலைவர் சின்னத்துரை மாவட்ட கலெக்டர் ரவிக்குமாரிடமும் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர்.

 

மேலும் செய்திகள்