முக்கிய செய்திகள்:
மேல்-சபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

அ.தி.மு.க. சார்பில் 4 வேட்பாளர்கள் பட்டியலை பொதுச்செயலாளர், முதல்– அமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது,அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 7.2.2014 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்கள் அவைத் தேர்தலில் அ.தி.மு.க. வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்.

1. எஸ்.முத்துக்கருப்பன் (திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழகச் செயலாளர்)

2. என்.சின்னத்துரை (கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர்)

3. எல்.சசிகலா, (கழக மகளிர் அணிச் செயலாளர்)

4. விஜிலா சத்தியானந்த் (திருநெல்வேலி மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டதற்கு இணங்க நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்கள் அவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்– அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

 

மேலும் செய்திகள்