முக்கிய செய்திகள்:
திருச்சி சிவா மனு தாக்கல்

தமிழகத்தில் காலியாக உள்ள 6 பாராளுமன்ற மேல்சபை எம்.பி. பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 7–ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.முதல் நாளான இன்று தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திருச்சி சிவா தேர்தல் அதிகாரி ஜமாலுதீனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவரது வேட்புமனுவை தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், புதிய தமிழக கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜாவஹிருல்லா உள்பட 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிந்து இருந்தனர்.

திருச்சி சிவாவுடன் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், சுப.தங்கவேலன், சிவசங்கர், செங்குட்டுவன், கம்பம் ராமகிருஷ்ணன், தி.மு.க. கொறடா சக்கரபாணி, கோவி.செழியன், மைதீன்கான், வசந்தி ஸ்டான்லி ஆகியோர் வந்திருந்தனர்.

மனுதாக்கலுக்கு பின் திருச்சி சிவா நிருபரிடம் கூறும்போது, "இந்த தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். கூட்டணி கட்சி தலைவர்களின் ஆதரவு உள்ளது" என்றார்.காங்கிரஸ்–தே.மு.தி.க. விடம் ஆதரவு கேட்பீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, "எங்களுக்கு வெற்றி பெறும் அளவுக்கு ஆதரவு உள்ளது. எனவே வெற்றி நிச்சயம்" என்றார்.

மேலும் செய்திகள்