முக்கிய செய்திகள்:
தமிழக சட்டசபை 30–ந்தேதி கூடுகிறது

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த அக்டோபர் மாதம் 23–ந்தேதி முதல் 6 நாட்கள் நடந்தது. அதன்பின்னர் நவம்பர் 12–ந்தேதி சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.அப்போது இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். இந்தியா சார்பில் யாரும் இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

2014–ம் ஆண்டின் முதல் கூட்டம் வருகிற 30–ந்தேதி நடைபெறும் என்று கவர்னர் ரோசையா அறிவித்துள்ளார்.

ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கும். அரசின் சாதனைகள், புதிய திட்டங்கள் பற்றிய விவரம் அவரது உரையில் இடம் பெறும்.இது குறித்து தமிழக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெயிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,தமிழக சட்டசபை கூட்டத்தை கவர்னர் வருகிற 30–ந்தேதி (வியாழக்கிழமை) 12 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார். அன்று நண்பகல் 12 மணிக்கு கவர்னர் உரை நிகழ்த்த உள்ளார்.இவ்வாறு ஜமாலுதீன் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்