முக்கிய செய்திகள்:
விழுப்புரம் கோர்ட்டில் பொன்முடி ஆஜர்

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா. பூந்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளி அரசுக்கு இழப்பீடு செய்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசில் வானூர் தாசில்தார் குமாரபாலன் கடந்த 2012–ல் புகார் செய்தார். இதையொட்டி 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

இதையொட்டி முன்னாள் அமைச்சர் பொன்முடி, லோகநாதன், கோதகுமார், சதானந்தனம், கோபிநாத் ஜெயச்சந்திரன் ஆகிய 6 பேர் ஆஜர் ஆனார்கள். பொன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகிய 2 பேர் ஆஜராகவில்லை.

இந்த வழக்கை நீதிபதி வெற்றிசெல்வி விசாரித்தார். வழக்கு விசாரணையை பிப்ரவரி 20–ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

 

மேலும் செய்திகள்