முக்கிய செய்திகள்:
அ.தி.மு.க. இலக்கிய அணி:மத்திய அமைச்சருக்கு கண்டனம்

அ.தி.மு.க. இலக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் தலைமை கழகத்தில் இன்று நடந்தது.கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் வருமாறு:–

தமிழகத்தை இந்தியாவில் முதல் மாநிலமாக முன்னேற்றி வரும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 66–வது பிறந்தநாளையொட்டி சர்வமத வழிபாட்டு தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனை செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும்.மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்துக்கு துரோகம் செய்து வரும் காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும் இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். 40 தொகுதிகளிலும் முதல்– அமைச்சர் அறிவிக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.

மத்திய மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்துக்கு வரும்போதெல்லாம் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதைத்தான் வாடிக்கையாக கொண்டுள்ளார். தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடைபெற காலதாமதம் ஆவதற்கு தமிழக அரசு மீது பழிபோடுகிறார். பொத்தாம் பொதுவாக அவர் குறை சொல்வதை கண்டிக்கிறோம்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா இந்த பிரச்சினையில் 33 கடிதங்கள் பிரதமருக்கு எழுதி மேற்கொண்ட முயற்சியால்தான் மீனவர்கள் விடுதலையாகி இருப்பதை சுட்டிகாட்ட விரும்புகிறோம்.முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் ஆகும் காலம் கனிந்துள்ளது. தேசிய கட்சிகள் தேய்ந்து வருகிறது. தேசிய தலைமை அம்மாவை தேடி வருகிறது.

நெஞ்சுரமும், நிர்வாக திறமையும் அமைய பெற்ற முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் ஆக ஒன்றுபட்டு சபதம் ஏற்று உழைப்போம்.

 

மேலும் செய்திகள்