முக்கிய செய்திகள்:
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் குவியும் விருப்ப மனு

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து இன்று முதல் விருப்ப மனு பெறப்படுகிறது.

தி.மு.க. தலைமை கழகமான அண்ணா அறிவாலயத்தில் துணை பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமி மனுக்களை பெற்றார்.

தென் சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், மத்திய சென்னையில் மு.க.ஸ்டாலினும் போட்டியிட வேண்டும் என்று ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. விருப்ப மனு கொடுத்தார்.

மத்திய சென்னையில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் போட்டியிட வேண்டும் என்று ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் அன்புத்துரை, நுங்கை வி.எஸ்.ராஜு, ஆயிரம் விளக்கு பொருளாளர் பழக்கடை ஏ.சேகர், ப.ராபர்ட், ஆயிரம் விளக்கு பகுதி அவைத்தலைவர் விக்டர் ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர்.

தென் சென்னையில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று கே.கே.நகர் பகுதி செயலாளர் தனசேகரன், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே.கண்ணன் ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர்.

விருப்ப மனு கொடுப்பதற்கான விண்ணப்ப படிவம் ரூ.1000 ஆகும். தனித்தொகுதி மற்றும் பெண்கள் தொகுதிக்கு விருப்ப மனு கொடுக்க ரூ.10 ஆயிரம் கட்டணமும், பொதுத் தொகுதிக்கு விருப்ப மனு கொடுக்க ரூ.25 ஆயிரம் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்