முக்கிய செய்திகள்:
49 பேர் காயத்துடன் நிறைவு பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள 650 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதுபோல மாடுபிடி வீரர்கள் 600 பேர் பதிவு செய்யப்பட்டிருந்தனர். காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு உடல் பரிசோதனை செய்தபின்னர் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டது.

பின்னர் காலை 8 மணிக்கு கோட்டை முனியசாமி திடலில் போட்டி தொடங்கியது. பகல் 2.05 மணிக்கு முடிவடைந்தது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. 49 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 3 பார்வையாளர்கள் உள்ளிட்ட 7 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்