முக்கிய செய்திகள்:
நீலகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார்

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரின் 97–வது ஆண்டு பிறந்த நாளான 17.1.2014 வெள்ளிக்கிழமை அன்று பகல் 12.30 மணிக்கு நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பேரூராட்சி, டானிங்டனில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி எம்.ஜி.ஆரின் 97–வது ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டு இனிப்பு வழங்க உள்ளார்.

நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர் மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறு பான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் கழக உடன்பிறப்புகள் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்