முக்கிய செய்திகள்:
பயணிகளின் வசதிகாக இரவு முழுவதும் கண்காணித்த அமைச்சர்

போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இரவு முழுவதும் கோயம்பேடு பஸ்நிலையத்தில் நின்று பயணிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகளை கண்காணித்தார்.ஆம்னி பஸ்நிலையத்திற்கும் சென்று ஆய்வு செய்தார். அப்போது அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்கள், அதிக எடை ஏற்றி சென்ற பஸ்கள், பாதுகாப்பு விதிமுறைகள் சரிவர இல்லாத 28 பஸ்கள் சோதனையில் சிக்கின.

இந்த பஸ்கள் மீது அபராதம் விதிக்க அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டார். அதன்படி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 28 பஸ்களுக்கும் பெர்மிட்டை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்ல இன்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் 1175 சிறப்பு பஸ்கள் கோயம் பேட்டில் இருந்து இயக்கப்படுகிறது.முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோயம்பேடு பஸ்நிலையத்தில் முகாமிட்டு கூட்டத்துக்கு ஏற்ப ஒவ்வொரு ஊர்களுக்கும் பஸ்விட அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளார்.இதனால் பயணிகளுக்கு சிரமம் இன்றி பஸ்சில் இடம் கிடைத்து வருகிறது.

 

மேலும் செய்திகள்