முக்கிய செய்திகள்:
அ.தி.மு.க. நிர்வாகிகள் மரணம்: ஜெயலலிதா இரங்கல்

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,அ.தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர், மதுரை புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளருமான பாண்டியம்மாள்தேவி, கோவை மாநகர் மாவட்டம், வெள்ளக்கிணறு பேரூராட்சிக் கழகச் செயலாளர் மணி, தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றிய ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

பாண்டியம்மாள்தேவி, மணி, பாலசுப்ரமணியன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்