முக்கிய செய்திகள்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு:சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறப்பு

சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், முக்கிய நகரங்களுக்கும், பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் 6514 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

சிறப்பு பஸ்கள் இன்று (10 ந்தேதி) முதல் 19ந்தேதி வரை இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இன்று 600 சிறப்பு பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு புறப்பட்டு செல்கின்றன.

நாளை (11 ந்தேதி) 1325 சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன. சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது. வழக்கமாக கோயம்பேட்டில் 10 டிக்கெட் கவுண்டர்கள் செயல்படுகின்றன.

பொங்கல் பண்டிகை சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு செய்வதற்காக கூடுதலாக 15 டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்காமல் விரைவாக முன்பதிவு செய்யும் வகையில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டன.

இதனை போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து பொது மக்கள் சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு செய்தனர்.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட அதிக மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். ரெயிலில் இடம் கிடைக்காதவர்கள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அரசு சிறப்பு பஸ்களை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்