Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/content/55/10886855/html/makkalkattalai/tamizhagatimes/adminpanel/inc/config.php on line 12
கல்வி-மருத்துவத்திற்கான நிதி உதவியை கருணாநிதி வழங்கினார். - Tamizhaga Times
முக்கிய செய்திகள்:
கல்வி-மருத்துவத்திற்கான நிதி உதவியை கருணாநிதி வழங்கினார்.

தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது,கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த 5 கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வந்தது.

வைப்பு நிதியாக போடப்பட்ட 5 கோடி ரூபாயில், 30–வது புத்தகக் கண்காட்சியினை 10.1.2007 அன்று திறந்து வைத்த தலைவர் கருணாநிதி, கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்– பதிப்பாளர் சங்கத்துக்கு 1 கோடி ரூபாய் வழங்கியது போக மீதமுள்ள 4 கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் "நெஞ்சுக்கு நீதி", ஆறாம் பாகம் நூல் வெளியீட்டு விழாவில் வசூலான தொகையில் இருந்து 3 லட்சம் ரூபாய், தமிழ்க் கனிப் பதிப்பகத்தின் சார்பில் கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. இந்த தொகையினை சேர்த்ததால் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 13 நபர்களுடன் இம்மாத (2013 டிசம்பர்) பட்டியலில் கூடுதலாக 12 நபர்களையும் சேர்த்து, மொத்தம் 25 பேருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.3 கோடியே 90 ஆயிரம். மேலும் 2013, டிசம்பர் மாதம் வட்டியாக கிடைத்த தொகையும் தமிழ்க்கனிப் பதிப்பகத்தின் சார்பில் வழங்கப்பட்ட தொகையும் சேர்த்து, இம்மாதம் மட்டும் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 25 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 லட்சத்து 25 ஆயிரத்தை இன்று வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்