முக்கிய செய்திகள்:
மாணவர்கள் வேட்டி வாங்கினால் சிறப்பு தள்ளுபடி:கோ– ஆப்டெக்ஸ் அறிவிப்பு

கோ– ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம் கூறுகையில்,அனைத்து தரப்பு மக்களிடமும் வேட்டி தினத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இந்த மாதத்தில் இதுவரை 25 ஆயிரம் வேட்டிகள் கூடுதலாக விற்றுள்ளன. பொங்கல் பண்டிகைக்கு வழக்கமாக 40 ஆயிரம் வேட்டிகள் விற்பனையாகும். இந்த முறை 1 லட்சம் வேட்டிகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்லூரி மாணவர்களிடம் வேட்டி அணியும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும்.

ஏற்கனவே வேட்டி ரகங்களுக்கு 20 மற்றும் 30 சதவீத தள்ளுபடியை அரசு அறிவித்துள்ளது. கல்லூரி மாணவர்கள் தங்கள் அடையாள அட்டை நகலை கொடுத்தால் கூடுதலாக 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். அனைத்து கோ– ஆப்டெக்ஸ் கிளைகளிலும் இந்த சலுகையை பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்