முக்கிய செய்திகள்:
தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்

நிதித்துறை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது,மின்சார வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், போக்குவரத்து கழகம் உள்பட மாநிலத்தின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் பணியாற்றும் ஏ மற்றும் பி பிரிவு பணியாளர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் போனசாக அளிக்கப்படும்.

இதே போன்று சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ. 3 ஆயிரம் என்ற உச்ச வரம்புக்கு உட்பட்டு 30 நாட்கள் ஊதியத்துக்கு இணையான மிகை ஊதியம் வழங்கப்படும். இதன்படி அவர்களுக்கு ரூ. 3 ஆயிரம் போனஸ் கிடைக்கும்.

போக்குவரத்து கழகங்கள் உள்பட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ. 500 பொங்கல் பரிசாக அளிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்