முக்கிய செய்திகள்:
கருணாநிதியை சந்தித்து விளக்கம் அளித்தார் அழகிரி

தென் மண்டல தி.மு.க. அமைப்பு செயலாளர் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் இனி ஒரு விதி செய்வோம்’ என்ற தலைப்பில் பரபரப்பான போஸ்டர்களை ஒட்டினார்கள்.இந்த நடவடிக்கைகளுக்கு தி.மு.க. மேலிடம் கண்டனம் தெரிவித்தது.

மதுரை மாநகர தி.மு.க. அமைப்புகள் அனைத்தும் கூண்டோடு கலைக்கப்பட்டன. மதுரை மாநகர தி.மு.க. பொறுப்புக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு மு.க.அழகிரி அளித்த பேட்டியில் விஜயகாந்தை விமர்சனம் செய்ததோடு தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்க கூடாது என்று கூறி இருந்தார். இதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.இந்த நிலையில் மு.க. அழகிரி இன்று கோபால புரத்திற்கு வந்தார். அங்கு உள்ள வீட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.

காலை 9 மணி முதல் 9.25 வரை கோபாலபுரம் வீட்டில் இருந்தார். அப்போது மதுரையில் நடந்த சம்பவங்களுக்கும், டி.வி. பேட்டி தொடர்பாகவும் கருணாநிதியிடம் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

தி.மு.க. தலைமைக்கும் மு.க.அழகிரிக்கும் இடையே இருந்த பிரச்சினை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

 

மேலும் செய்திகள்